மேலும் அறிய

கரூர்: மனுநீதி நாள் முகாமில் 357 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி

கிருஷ்ணராயபுரம் வட்டம், , தேசியமங்கலம்  கிராமத்தில் நடைபல்வேறு துறைகளின் சார்பில்  ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் தெற்கு கிராமம், தேசியமங்கலம்  கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.லியாகத் அவர்கள் 357 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில்  ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் தெற்கு கிராமம், தேசியமங்கலம் கிராமத்தில்  நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.லியாகத் அவர்கள் 357 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக ரூ.3,29,97,621 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கரூர்: மனுநீதி நாள் முகாமில் 357 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகிணங்க, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

கரூர்: மனுநீதி நாள் முகாமில் 357 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி

அதனடிப்படையில், இன்றைய தினம் கிருஷ்ணராயபுரம்  வட்டம், தெற்கு கிராமம், தேசியமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்,  நடைபெற்றுள்ளது.  கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாகச் சென்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், அனைத்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம் நடத்தப்படுகிறது. நம்முடைய ஊராட்சியில் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை பல்வேறு மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது அந்த பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றைய தினம் 357 பயனாளிகளுக்கு ரூ.3,29,97,621 கோடி மதிப்பீட்டில் அரசு  நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் இந்த ஊரு நாங்கள் வருவதற்கு முன்பே அடையாளம் கண்டு ஊரக வளர்ச்சித்தறை சார்பாக 06 பணிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.33.06 இலட்சம் ரூபாய் காண நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஊராட்சிக்கு தேவையான 3 சிறு சமுதாயகூடம், 2 மேல்நிலை  நீர்த்தேக்கதொட்டி, 1 கிணற்றுக்கு கம்பி வலை அமைத்தல் இது போன்ற பணிகளுக்கு மொத்தமாக ரூ.33.06 லட்சம் மதிப்பிலான நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய தேவைகளை அறிந்து அவற்றிற்கான தேவைகளை பூர்த்தி செய்வதில்  நமது மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார். 

இம்முகாமில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 134 பயனாளிகளுக்கு ரூ.1,34,00,000 மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டாக்களும், 1 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 1 வாரிசு சான்றும், 7 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 42 பயனளிகளுக்கு ரூ50,40,000 மதிப்பீட்டில் முதியோர் உதவி தொகைக்கான ஆணைகளையும்,  34 பயனாளிகளுக்கு ரூ40,80,000 மதிப்பீட்டில் விதவை உதவி தொகைக்கான ஆணையையும், 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ28,80,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 12 பயனாளிகளுக்கு ரூ.2,70,000 மதிப்பீட்டில்  இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 26 பயனாளிகளுக்கு ரூ.2,32,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும்,  வட்ட வழங்கல்த்துறை சார்பில் 22 பயனாளிக்கு புதிய குடும்ப அட்டையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15,441 மதிப்பீட்டில் விதைகளும், 1 பயனாளிகளுக்கு ரூ.4,000 மதிப்பீட்டில் சூரிய ஒளி பூச்சி பிடிப்பான் கருவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.4,76,000 மதிப்பீட்டில் கறவை மாடு வளர்ப்பும், 32 பயனாளிகளுக்கு ரூ.24,04,180 மதிப்பீட்டில் பயிர்கடனும், மாவட்ட முனனோடி வங்கியின்சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8,90,000 மதிப்பீட்டில் வங்கி கடனுதவியும்  என  மொத்த 357 பயனாளிகளுக்கு ரூ.3,29,97,621 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.லியாகத் அவர்கள் வழங்கினார்கள்.

கரூர்: மனுநீதி நாள் முகாமில் 357 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி

முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை ஆகியத் துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார். 

இந்நிகழ்வின்போது,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், இணை பதிவாளர் திரு.கந்தராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, தனித் துணை ஆட்சியர் சைபுதீன், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் திரு.மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி தவமணி, இராஜேந்திரன், தேசியமங்கலம் கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
Embed widget