கரூரில் விஷவாயு தாக்கி இறந்த விவகாரம்: மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்
கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
கரூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி என்பவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கழிவுநீர் தொட்டியில் சென்ட்ரிங் வேலைகள் முடித்து சவுக்கு கம்புகள் மற்றும் பலகைகளை பிரிப்பதற்காக உள்ளே இறங்கிய போது நான்கு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக உயிரிழந்த தொழிலாளர்களில் இரண்டு பேர் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய பட்டியல் இன ஆணையம் நேரில் விசாரணை மேற்கொண்டது. மேலும், தமிழக அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும், கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கரூரில் நான்கு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம்அனுமதி பெறாத கட்டிடத்தை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு.
கரூர் அடுத்த சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மோகன்ராஜ், சிவக்குமார், ராஜேஷ்குமார், கோபால் ஆகிய நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம். புதிய கட்டிடம் கட்டுமான பணிக்காக கரூர் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் பணி நடைபெற்றதால், 15 நாட்களுக்குள் கட்டிடத்தை இடித்து அகற்றவும், இல்லையெனில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இடைநிலை உத்தரவுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சி. ஐ.டி.யு சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், செயல் திறன் ஊழியர்கள் மற்றும் செயல் திறன் அற்ற ஊழியர்கள், தட்டச்சர், தரவு உள்ளீட்டாளர், வரி வசூலர், இரவுக் காவலர், பதிவற்ற எழுத்தாளர் உள்ளிட்ட 20 வகையான நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஒப்பந்த முறையை செயல்படுத்தும் தமிழக அரசின் அரசாணை எண் 152-ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி சுய உதவி குழு ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.