மேலும் அறிய

தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இலவச வீடு - கரூர் ஆட்சியருக்கு ஆதரவற்ற பெண் நன்றி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தந்தையிழந்த பெண் குழந்தைகளுக்கு உடனடியாக வீடு வழங்கி உதவி செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்.

“நான் கேட்டது  இலவச வீட்டு மனை பட்டா தான் ஆனால் என் நிலைமையை உணர்ந்து  எனக்கு ரூ.8.68 இலட்சம் மதிப்பில் வீடே வழங்கி உள்ளார்கள்” என தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நெஞ்சார்நத நன்றியை தெரிவித்தார் ஆதரவற்ற பெண்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8.68 இலட்சம் மதிப்புடைய வீட்டை ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணையினை கிருஷ்ணராயபுரம் வட்டம் மேல முனையனூர் கிராமத்தைச் சேர்ந்த  சித்ரா அவர்களிடம் வழங்கினார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகனின் நலன் கருதி இந்த வீடு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் வட்டம் மேல முனையனூர் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா ஆதரவற்ற நிலையில் இரண்டு குழந்தைகளுடன் இலவச வீட்டுமனை கேட்டு மனு அளித்தார். அவர்களின் கோரிக்கை ஏற்று  இரண்டு பெண்குழந்தைகளின் வாழ்வாதார உயர்த்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி நேரு நகர் தோரணக்கல்பட்டியில் தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8.68 இலட்சம் மதிப்புடைய வீட்டை ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பங்களிப்பு தொகையினை தனது சொந்த விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் அவர்களுக்கு வீடு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இரண்டு பெண் குழந்தைகளை கைகுழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்து பள்ளி செல்லும் குழந்தைக்ள நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இலவச வீடு - கரூர் ஆட்சியருக்கு ஆதரவற்ற பெண் நன்றி

இதுகுறித்து சித்ரா, “கிருஷ்ணராயபுரம் வட்டம் மேல முனையனூர் கிராமத்தைச் சேர்ந்த நான் எனது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துவதற்கு சிரமமாக இருந்தது.  எனக்கு  இலவச வீட்டுமனை கேட்டு மனு அளித்தேன். எனது கோரிக்கை மனுவை கருணையுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சித் தலைவர் ரூ.8.68 இலட்சம் மதிப்புடைய வீட்டில் ரூ.7.50 மாநில அரசுகளின் மானியம் போக நான் கையில் இருந்து கட்ட வேண்டிய தொகையை மாவட்ட ஆட்சித் தலைவரின் தனது விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூபாய் 1.18 இலட்சம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே வழங்கி நேரு நகர் தோரணக்கல்பட்டியில் தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் எனக்கு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக ஒரு வீட்டை ஒதுக்கிடு செய்து அதற்கான உத்தரவை உடனடியாக வழங்கியுள்ளார்.

தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இலவச வீடு - கரூர் ஆட்சியருக்கு ஆதரவற்ற பெண் நன்றி

நான் கேட்டது வீட்டுமனை பட்டாதான். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐயா அவர்கள் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்து  அதற்கான ஆணைகளை வழங்கி உள்ளார்கள். எப்படி வாழ போகிறோம்? இரண்டு பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்க்க போகிறோம் என்று கலங்கி இருந்த நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஐயா அவர்கள் இந்த பேரூதவியை செய்து உள்ளார். இதற்காக வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐயா அவர்களுக்கும் என்றும் நன்றியோடு இருப்பேன்” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget