மழை அளவு குறைந்ததால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து குறைவு
அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 1,221 கனஅடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது. மழை அளவைப் பற்றி எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு 1,758 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 88.9 கனஅடியாக உள்ளது.
அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 1221 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே உள்ள பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு முன்தினம் 4,494 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் ஆற்றுப்பகுதிகளில்மழை இல்லாத காரணத்தால் படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் காலை நிலவரப்படி அமராவதி ஆறு பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 3,419கன அடி தண்ணீராக குறைந்துள்ளது.
மாயனூர் கதவனுக்கு தற்போதைய அணை நிலவரம்.
கரூர் அருகே மாயனூர் கதவனுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் 420 கனஅடி தண்ணீரும் வந்தது இந்நிலையில் காலை நிலவரப்படி அணைக்கு 25417 கன அடி தண்ணீர் வரத்தாக குறைந்துள்ளது. டெல்டா பாசன பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக காவேரியில் இருந்து 24 ஆயிரத்து 797 கன அடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 112 கன அடி தண்ணீர்கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணையிலிருந்து காலை நிலவரப்படி வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 38.97 கனடியாக உள்ளது.
ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நிலவரம்.
கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. 26.90 கன அடிஉயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 26.17அடி யாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால்நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னியாறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 28.06 கனஅடியாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் மழையளவு இல்லை.
தமிழகத்தில் வருகின்ற இரண்டு, மூன்று நாட்களில் பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை அறிக்கை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இருந்த போதிலும் கரூர் மாவட்டம் மழை அளவைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆகவே சிறு குறு பாசனை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.