கரூரில் தொழில் முனைவோருக்கான வங்கி கடன் உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.
கரூர் மாவட்டம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 1236 பயனாளிகளுக்கு ரூ.247.57 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 1236 பயனாளிகளுக்கு ரூ.247.57 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் பல்வேறுத் துறைகளில் சார்பில் ரூ. 250 கோடிக்கான பல்வேறு அரசு திட்டங்கள் மானியங்களுடன் கூடிய வங்கி கடன் வழங்கும் மாபெரும் விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன். வழங்கக்கூடிய மிகப் பெரிய நிதி உதவி மூலம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய தாக்கத்தை எளியோர் வாழ்வில் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமில்லை. கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து விதமான கடன் உதவிகள் அனைத்து மக்களும் திட்டத்தின் உடைய பயன் மற்றும் பலன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற வகைகளில் உறுதியாக செயல்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு திட்டத்தின் உடைய வழிமுறையை நெறிமுறைப்படுத்தப்பட்டு உரிய காலத்திற்குள் செயல் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அலுவலர்கள் தான். மக்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வதை எளிமைப்படுத்த வேண்டும். என்ற நீண்ட நெடிய பயணத்தை மாவட்ட நிர்வாகத்தினுடைய முயற்சியில் மேற்கொண்டு வருகிறோம். இந்த கரூர் மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு வங்கிகளிலும் பல்வேறு கூட்டுறவு வங்கியின் மூலம் கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதனை நான் உணர்கிறேன். திட்டத்தில் நூறு சதவீதம் சிறப்பு நிலையை அடைய அதற்கான முயற்சிகள் கண்டிப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் கல்வி கடன் பெறுவதற்கு வழிகாட்டியாக ஒரு உதவி மையம் உருவாக்கியுள்ளோம்.
கடன் பெறுவதற்கான வழிமுறைகளின்படி அனைத்து வங்கிகளிலும் சரியான பதில்கள் கிடைக்கும். அதுபோல தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சிகளின் பலனாக 250 கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய கடன் மேளாவில் அரசு மானியத்துடன் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி இருக்கின்றோம். இந்த கடனை ஒரு மூலதனமாக கொண்டு நீங்கள் முன்னெடுக்கக்கூடிய அந்த பணிகளில் சிறப்பாக இருக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் தான் உங்களை சுற்றி இருப்பவர்கள் சமுதாயத்தில் வெற்றி பெற முடியும். கரூர் மாவட்டமே வளர்ச்சியடையும் எனவே நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு பெரும் விழாவிற்கு தலைமை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.