மனு வாங்குவதில் அலட்சியம் காட்டிய ஆர்.எம்.ஓ - கரூர் ஆட்சியர் விட்ட டோஸால் அதிகாரிகள் அதிர்ச்சி
’’சிறுவனுக்கு இதயம் வலது புறம் இருப்பதாக தாய் ஆர்.எம்.ஓவிடம் முறையிட அதற்கு அவர் நக்கலான முறையில் பதிலளித்துள்ளார்’’
வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு பொது மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதன் அதிகாரிகள் உடனுக்குடன் தீர்த்து வரும் நிலையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர் தனது மகன் உடல்நிலை குறித்து மனு அளிக்க வந்திருந்தார். அப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் வேறு பணி காரணமாக சென்றதால் அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்எம்ஓ (பொறுப்பு) அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
அதை பெற்ற ஆர்எம்ஓ (பொறுப்பு) குமார் அவர்கள் அந்தப் பெண்மணியிடம் ஒருமையில் பேசியதாகவும், அப்போது அந்த மருத்துவர் இங்கு இதற்கு வந்தீர்கள், நீங்கள் நேரடியாக மருத்துவமனைக்கு தானே வர வேண்டும் என்று தனது முதல் கேள்வியை துவங்கி பல்வேறு கோபமான கேள்விகளை வெளிப்படுத்தினார். அந்த சிறுவன் இதயம் வலது புறம் இருப்பதாக மகனின் தாய், ஆர்.எம்.ஓவிடம் முறையிட அவர் அதற்கு நக்கலான முறையில் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்ட ஆறு வயது சிறுவனின் தாயார் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வெளியே வந்து அவரது உடன் வந்த தோழியிடம் கட்டி அரவணைத்து கண்ணீர் மல்க இந்த பிரச்சனையை கூறினார்.
அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சற்று நேரத்தில் அலுவலகம் வந்தார். மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குறைகளை கேட்டு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த பெண்மணியை பார்த்து தங்களுக்கு என்னவென்று கேட்கும் போது வெங்கமேடு சேர்ந்த பரிதா பேகம் அவர்கள் எனது மகனுக்கு இதயம் மாற்று இடத்தில் இருப்பதால் அதற்கு தாங்கள் மருத்துவம் பார்க்க உதவி புரியுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து இது சம்பந்தமாக தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது முன்பே கொடுத்துவிட்டேன். என்று கூறிய நிலையில் இதைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஆர்எம்ஓ (பொறுப்பு) நேற்று கூட்டத்திற்கு வந்திருந்த குமாரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணை நடத்தினார். மாவட்ட ஆட்சித்தலைவர் கேள்விக்கு அவர் சரிவர பதில் அளிக்காததால், டென்ஷனான மாவட்ட ஆட்சித்தலைவர் என்னிடமே இப்படிப் பேசுகிறார். என்றால் பொது மக்களிடம் எப்படி பேசுவீர்கள் என்று காட்டமாக பேசினார்.
அதை தொடர்ந்து குமாரிடம் நீங்கள் இரண்டு நாளில் இந்த மனு மீது ரிப்போர்ட் எனக்கு அளிக்க வேண்டும் எனவும், நீங்கள் வாக்குவாதம் செய்வதால் எந்த பலனும் இல்லை எனவும் அஜாக்கிரதையாக தங்களது பணியை செய்தால் பணியிட மாற்றம் செய்ய நேரிடும் என எச்சரித்தார். அதற்கு அந்த மருத்துவர் ஏதும் கூறாமல் நின்றபடியே இருந்தார். அதைத் தொடர்ந்து வெங்கமேடு சேர்ந்த பரிதாபம் 6 வயது மகன் இதயத்துடிப்பை பரிசோதனை செய்தார். பரிதா பேகம்த்திடம் மாவட்ட ஆட்சித்தலைவர் நானும் மருத்துவர் தான் இதற்கான யோசனைகளை விரைவாக எடுத்து தங்கள் மகனை பிற்காலத்தில் உடல் ரீதியான பிரச்சினை இல்லாமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் மனிதநேய நடவடிக்கைக்கு சிறுவனின் தாயார் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றி கூறிய பிறகு அங்கிருந்து விடைபெற்றார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பணியை மேற்கொள்ளும் போது, அரசு அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். நீங்கள் மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளீர்கள் எனவும், அதனை கவனமுடன் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் நம் துறையை பற்றி தவறான செய்திகள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அப்படி வரும் பட்சத்தில் உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப் படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெங்கமேடை சேர்ந்த சிறுவனுக்கு இதயம் வலதுபுறம் இருப்பதை மிகவும் ஜாக்கிரதையாக கையாண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்எம்ஓ (பொறுப்பு) அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட கூட்டரங்கில் டோஸ் விட்டது மற்ற அதிகாரிகளையும் வேர்த்து விறுவிறுக்க செய்ய விட்டது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )