கரூரில் பெண் சுகாதார தன்னார்வலர்களை பாராட்டி சீருடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
மருத்துவப்பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:,
மக்களை தேடி மருத்துவம் என்பது தமிழ்நாடு முதலமைச்சர், நம்முடைய தமிழ்நாடு மக்களுக்காக வழங்கி இருக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த முன்னோடி திட்டம் ஆகும். அதற்கு முக்கியமான மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் அனைவரும் சென்றாலும் இந்த சுகாதாரத்துறையே இல்லாமல் இதுவரைக்கும் சுகாதாரத்திற்காக வேலையை பார்க்காத பெண்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்து சிறப்பாக கொண்டு செல்கிறார்கள். அந்த பெண் சுகாதார தன்னார்வலர்களான உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாருமே ஒரு குடும்பத்தில் இல்லத்தரசிகள் அல்லது மாணவிகள். நீங்கள் மருத்துவ படிப்பு, செவிலியர் பயிற்சி படிப்புகள் இல்லாதவர்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் ஊரில் பெரிய டாக்டராக, செவிலியர்களாக செயல்படுவீர்கள்.
நம் மாவட்டத்தில் ஒரு மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால் 194 பெண் சுகாதார தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு தொழில் வளம் நிறைந்த மாவட்டத்தில் இருந்து கொண்டு இந்தப் பணியில் சிறப்பாக மேற்கொண்டு உள்ளீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வை இதில் காட்டுகின்றது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இந்த சூழ்நிலையில் இரண்டு வருடங்களாக இந்த திட்டம் உள்ளது. இந்த சீருடை பழையதாக ஆகிவிட்டது புதியதாக வாங்கி கொடுக்க சொன்னார்கள். இந்த சீருடையை சிறப்பாக வடிவமைத்து கொடுத்த ரெங்கா பாலிமர் உரிமையாளர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த சீருடை உங்களின் சிறப்பான பணிக்காக வழங்கியுள்ளோம். இத்திட்டத்தினை சிறந்த முறையில் பங்களிப்பு அளித்து சுகாதாரத்துறையை முன்னெடுத்து செல்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார்.
பின்னர் மக்களை தேடி மருத்துவப்பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி ஆட்சியர் கௌரவித்தார். தொடர்ந்து சிறந்த முறையில் சீருடை தயாரித்து வழங்கிய ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம் தலைவர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டி மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார்
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆட்டிசம் பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தினர் வழங்கினார்கள்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.