வித்தியாசமாக பிறந்த ஆட்டுக்குட்டி.... அரைமணி நேரத்தில் நேர்ந்த சோகம்..!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தலை பெரியதாக வித்தியாசமான முறையில் பிறந்த ஆட்டுக்குட்டி பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தலை பெரியதாக வித்தியாசமான முறையில் பிறந்த ஆட்டுக்குட்டி பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழந்தது. இதனால் ஆட்டுக்குட்டியை வளர்த்த குடும்பத்தினர் சோகமடைந்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். இவர் 20க்கும் மேற்பட்ட கோழி மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஆட்டுக்குட்டி ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி வித்தியாசமான முறையில் தலை பெரியதாகவும் பார்ப்பதற்கு வினோத முறையில் பிறந்தது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்டுக்குட்டியை வந்து பார்த்து சென்றனர். ஆனால், பிறந்த அரை மணி நேரத்தில் வினோத முறையில் பிறந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. உரிமையாளர் ஜெகதீசன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்டுக்குட்டி இறந்ததால் சோகமடைந்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே அனுமதி இன்றி சேவல் கட்டு ( சேவல் சண்டை) நடந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாயனூர் போலீசார் கண்டு சேவல் சண்டை நடத்தியவர்கள், பங்கேற்றவர்கள் தப்பி ஓடினர். 10 பைக்குகளை (இருசக்கர வாகனங்கள்) மட்டும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வீரியப்பட்டி முருகன் கோவில் பகுதி மற்றும் பிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் பக்கம் ஆகிய இரு பகுதிகளில் பணம் வைத்து சேவல் சண்டை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மாயனூர் போலீஸார் இரண்டு பிரிவாக சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு விரைந்தனர். மும்முரமாக நடந்து வந்த சேவல் சண்டையில் போலீசார் வந்ததை பார்த்தவர்கள் அனைவரும் கிடைத்த சேவல், பணத்தை எடுத்து கொண்டு வயல் வெளியாக ஒட்டம் பிடித்து தப்பியோடினர். போலீசாரும் களத்தில் இறங்கி பிடிக்க முயன்றும் பிடிக்கமுடியவில்லை. சேவல் சண்டைக்காரர்கள் விட்டு சென்ற 10 பைக் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அனுமதி பெறாமல் சேவல் சண்டை நடத்திய நபர்கள் மற்றும் தப்பி ஓடிய வண்டியின் ரிஜிஸ்டர் நம்பரை வைத்து உரிமையாளர்களை பிடிக்கும் நடவடிக்கை மாயனூர் போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். கரூர் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் 10 இருசக்கர வாகன பிடிப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.