மேலும் அறிய
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்தவேண்டும் - அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையினை 2 அறைகளுக்கு பதிலாக 3 அறைகளில் நடத்தவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையினை 2 அறைகளுக்கு பதிலாக 3 அறைகளில் நடத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டிருப்பதால் முகவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது கடினமாக இருக்கும் என்று விஜயபாஸ்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தீவிர பரப்புரைக்கு பிறகு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில் வரும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















