கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடவூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
மாற்றுத்திறனாளி செந்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடவூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தான்தோன்றி மலை அருகே உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள கடவூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலையிடம் பலமுறை எனது வேலை வாய்ப்பு வேண்டி மனு வழங்கியும் இதுவரை எந்த பலனும் இல்லை தற்போது கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் எனக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி திடீரென கடவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் மாற்றுத்திறனாளி மன்னனை உடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பல கட்ட சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி செந்தில் எப்படி மண்ணெண்ணையை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார். உள்ளிட்ட பல்வேறு கேள்வி உடன் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிய மாற்றுத்திறனாளி செந்திலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து மனுக்களை பெற்றார்.
தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைவிற்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக இருக்கைகள் அமைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கே சென்று மனுக்களை பெற்றார் .அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் மீது உரிய விசாரணை எடுத்து விரைவாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என உத்தரவை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உயர்ந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்காக பிரத்தேக பணிகளை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் தான்தோன்றி மலையில் செயல்பட்டு வருகிறது. வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் அவர்கள் சீரிய முயற்சியால் பொதுமக்கள் சிரமமின்றி மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் தங்களது மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே பிரத்யேகமாக அரசு ஊழியர்கள் பொதுமக்கள் மனு மீது சீல் வைத்த பின்னர் துறை ரீதியான மனுக்கள் எங்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட பின் குறிப்புகளை எழுதி பொதுமக்கள் சிரமமின்றி மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஒப்படைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் தேவைக்கான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தின் சிறப்புமிக்க பணியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.