கரூர்: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ரூ. 24 லட்சம் நிதியுதவி
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சியில் சாலை விபத்தில் பலியான காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 24 லட்ச ரூபாய் நிதி திரட்டி நன்கொடையாக வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009 ஆம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009 ஆம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சார்பாக விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து,
24 லட்சத்து 30 ஆயிரத்து 943 ரூபாயை நிதி திரட்டி நன்கொடை வழங்கிய நிகழ்ச்சி சக காவலர்கள் மற்றும் கரூர் வட்டார பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்