Karthigai Deepam 2021: இன்று கார்த்திகை தீபம்.. வாழ்த்துகளால் நிரம்பும் சோஷியல் மீடியா! எப்படி விஷ் பண்ணலாம்?!
Karthigai Deepam 2021 Wishes in Tamil: கார்த்திகை திருநாளான இன்று மக்கள் பல்வேறு வாழ்த்துக்களை சோசியல் மீடியாக்களில் அனுப்பி வருகின்றனர்.
வாழ்த்துக்களையெல்லாம் நாம் நேரில் பரிமாறும் காலங்கள் மறந்துபோயிற்று. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நம்முடைய கலாச்சாரங்களும் மாறிவிட்டதோடு அவை தான் இப்போதும் டிரெண்டாகியும் வருகிறது. பிறந்த நாள் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ், முகநூல், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் வாழ்த்துக்களைப்பரிமாறிக்கொள்கின்றனர். இன்றைக்கு கார்த்திகை திருநாள் என்பதால் மொபைலை எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸைப் பார்த்தாலே விதவிதமான கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் மலையாய் குவிந்துள்ளது. தீபாவளிக்கு அடுத்தாற்போல் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடக்கூடிய பண்டிகை தான் கார்த்திகை திருநாள். அறியாமையை அகற்றும் ஒளியின் முடிவில்லாத ஆதாரமாக சிவபெருமான் தோன்றினால் என்று கூறப்படுவதாலும் அவருக்கும், அவருடைய மகன் கார்த்திகேயா என்று அழைக்கப்படும் முருகனுக்கும் உகந்த நாளாக தான் இத்திருநாள் பார்க்கப்படுகிறது. இதனால் தான் மக்கள் இத்திருநாளை மகிச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
மேலும் இன்றைக்கு மாலை ஒவ்வொரு வீடுகளிலும் விளக்குகளை ஏற்றி தெய்வங்களை வணங்கும் மக்கள் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இதுப்போன்ற வாழ்த்துக்களை சற்றுப் பரிமாறிக்கொண்டால் நமக்கு மட்டுமில்லை நம் அனுப்பும் வாழ்த்துக்களைப்பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சிப்பெருகும். இன்றைக்கு பலரின் சோசியல் மீடியாக்களில் உள்ள 2021 ஆம் ஆண்டின் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்களின் பட்டியல்…..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.
கார்த்திகை தீபத் திருநாளில் இதோ உங்களுக்கு நல்வாழ்த்துகள்.
உங்கள் அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்.
இனிய கார்த்திகை தீபம் 2021
கார்த்திகை தீபத்தின் தீபங்கள் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும், மேலும் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை நீங்கள் பெறுங்கள்.
உங்கள் வாழ்வில் பிரகாசம் பெருக்கட்டும். முருகனின் ஆசிர்வாதம் உங்களுக்கு…
தீப விளக்குகள் உங்கள் வாழ்க்கையில் ஒளிரட்டும். கோலத்தின் அழகு உங்கள் வாழ்க்கையில் அமைதி சேர்க்கட்டும். அப்பமும், பொரியும் அனைவரின் வாழ்க்கையிலும் இனிமை சேர்க்கட்டும்.
கார்த்திகை தீபத்தின் அனைத்துத் தீபங்களும் உங்கள் வாழ்க்கை ஒளிரச்செய்யட்டும். சிவபெருமானின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
கார்த்திகை திருநாளில் சிவபெருமான் உங்கள் வாழ்க்கையில் இருந்து அனைத்து எதிர்மறை எண்ணங்களும் நீக்கட்டும்.
மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷடம் உங்களுக்கு கிடைக்கட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியான கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபத் திருநாளில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க விரும்புகிறேன்.
உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.
இதுபோன்ற வாழ்த்துச் செய்திகள் தான் கார்த்திகை திருநாளான இன்று மக்கள் பலராலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீங்களும் இந்த வாழ்த்துகளை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.