காஞ்சிபுரம் மின் தடை: நாளை பராமரிப்பு பணி! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ!
Kanchipuram Power Shutdown Tommorow :"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (12-11-2025) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படும் உள்ளதாக மின்சாரத்துறை அறிவித்துள்ளது"

Kanchipuram power Cut: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"
மின்தடை அவசியம் என்ன?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்தடை
சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (12-11-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவு 230கி/வோ. ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு:
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில்; 230 கி/வோ. ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி வரும் 12.11.2025 புதன்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு துலக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்
12.11.2025 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.





















