மேலும் அறிய

Kamarajar Birthday: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி நாயகர் காமராஜரின் 120-வது பிறந்த தினம் இன்று..! இதை தவிர்க்காம படிங்க..

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவருடைய பிறந்தநாளை தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. 2006-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார். அப்போது முதல் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவர் அரசியலில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். சுதந்திர போராட்டங்களிலும் இவர் பங்குபெற்றார். இவர் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இவரை ஆங்கிலேயே அரசு சிறையில் அடைத்தது. அதன்பின்னர் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உருவாகினார். 

Kamarajar Birthday: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி நாயகர் காமராஜரின் 120-வது பிறந்த தினம் இன்று..! இதை தவிர்க்காம படிங்க..

1937 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1952ஆம் ஆண்டு விருதுநகரிலிருந்து எம்பியாக தேர்வாகினார். 1954ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இவர் 9 ஆண்டுகள் பதவி வகித்தார். அந்த 9 ஆண்டுகளில் இவர் கல்விக்காக நிறையே விஷயங்களை செய்தார். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய மக்கள் நிச்சயம் கல்வியை கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஏழை மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்படி இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தின் மூலம் பலரும் பயன் அடைந்தனர்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிற்கே முன்னோடியாக அமைந்தன. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. தமிழ்நாட்டின் இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து புகழ்ந்து வந்தன. காமராஜரின் இந்தத் திட்டம் அத்தகைய தொலை நோக்கு பார்வையுடன் அமைந்திருந்தது. கொரோனா பேரிடர் காலங்களிலும் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் நமக்கு நன்றாக தெரியவந்தது. பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் 120 வது பிறந்தநாளில் அவருடைய கொள்கையை முன்னெடுக்க நாம் உறுதி மொழி எடுப்போம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.