Kallakurichi Incident: பள்ளி மாணவி விழுந்த நிகழ்வை உருவ பொம்மை வைத்து ஆய்வு நடத்திய சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விழுந்த நிகழ்வை உருவ பொம்மை வைத்து ஆய்வு நடத்திய சிபிசிஐடி குழுவினர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி விழுந்ததாக கூறப்படும் இடத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் மரணித்ததது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று முதல் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இன்று பள்ளியில் மாணவி விழுந்ததாக கூறப்படும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிபிசிஐடி குழுவினர் ஜியாஉல்ஹக் தலைமையில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை மற்றும் அவர் பயன்படுத்திய பகுதிகள், மேலும் அவர் விழுந்ததாக கூறப்படக்கூடிய இடங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவியை போல் உருவ பொம்மையை தயார் செய்து அதை மாடியில் இருந்து குதிக்க வைத்து பரிசோதனை செய்தனர். மேலும் மாணவி கிடந்த இடத்தில் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவைகளை பதிவு செய்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விழுந்த நிகழ்வை உருவ பொம்மை வைத்து ஆய்வு நடத்திய சிபிசிஐடி@abpnadu pic.twitter.com/JA8veyo4ZF
— SIVARANJITH (@Sivaranjithsiva) July 19, 2022
நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர் மூன்று மணி நேரம் பள்ளி வளாகத்தில் இருந்து ஆய்வு பணியை செய்தனர். அதேபோல் மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவ மனையில் உடற்கூராய்வு பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதிமன்ற உத்தரவின்படி தடவியல் நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில், மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி கோகுல ராமன் ஆகிய மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர், புதிய எஸ்பி நியமனம் - தமிழக அரசு அதிரடிhttps://t.co/2cVJzxg5Fi#kallakurichi #collector #sp
— ABP Nadu (@abpnadu) July 19, 2022
Kallakurichi Issue : ”புள்ளைய கண்ணுல காட்டுங்க” கள்ளக்குறிச்சியில் கைதானவர்களின் பெற்றோர் கதறல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்