Kakkan Grand Daughter : ”தாத்தா என் அம்மாவோட நகையெல்லாம் இவங்களுக்காக கொடுத்தாரு “ - கக்கன் பேத்தி சொன்ன சீக்ரெட்
“என் தாத்தா தனக்கென தனிக்கொள்கையே வைத்திருந்தார். நான் அவரை பார்த்திருக்கிறேன். அவரிடம் இரண்டு வேஷ்டிகள்தான் இருக்கும் .”
மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியில் ஒரு கோவில் பூசாரிக்கு மகனாக பிறந்து பின்நாட்களில் தமிழ்நாடு போன்று மிகப்பெரிய அரசியல் தலைவரானவர் கக்கன். தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்களில் முன்னாள் அமைச்சரான கக்கனும் ஒருவர். கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியடிகளுடன் சென்று உப்பு சத்யாகிரக போராட்டத்திலும் கக்கன் கலந்துக்கொண்டு தடியடி பெற்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தழும்பு அவரது இறுதி காலம் வரையிலும் இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு ‘கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாக, இத்தடை நீக்கப்பட்டது. மதுரையில் கக்கன்தான் தலைமை தாங்கி அந்த போராட்டத்தில் மதுரைக் கோயிலினுள் நுழைந்தார். காமராஜருக்கு நெருக்கமான நண்பர் .
View this post on Instagram
எளிமையின் இலக்கணமாக , கறைபடியா கைகளுக்கு சொந்தக்காரராக , தியாக குணம் கொண்டவராக , நேர்மையாக விளங்கிய கக்கனின் பேத்தியும் அவர் வழியில் முடிந்தவரையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன் என்கிறார். கக்கனின் பேத்திகளுள் ஒருவரான மீனாட்சி விஜயகுமார் தற்போது தீயணைப்பு துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார், அவர் தனது சிறுவயதில் தாத்தாவிடம் இருந்து கற்ற அனுபவங்களையும் , அவரின் குணங்களையும் பகிர்ந்துகொண்டார். “என் தாத்தா தனக்கென தனிக்கொள்கையே வைத்திருந்தார். நான் அவரை பார்த்திருக்கிறேன். அவரிடம் இரண்டு வேஷ்டிகள்தான் இருக்கும் . அதை மாற்றி மாற்றி துவைத்து பயன்படுத்துவார். தாத்தா இறந்துபோன பொழுது எனக்கு 10 வயது இருக்கும் .
View this post on Instagram
அப்போ அவரை ஒரு மாட்டு வண்டியில்தான் எடுத்துட்டு போனாங்க.தாத்தாவிற்கு யாரிடமும் எதையும் இரவலாக வாங்கிக்கூட பார்க்க கூடாது. பிடிக்காது. என் அம்மா திருமண கோலத்தில் இருந்த பொழுது அவர் போட்டிருந்த நகைகளை எல்லாம் கழற்றி , சீன போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக கொடுத்தார். என் அம்மா என்னிடம் சொல்லியிருக்காங்க. நான் அப்போ அவரிடம் கற்றுக்கொண்டேன் நகைகள் முக்கியம் இல்லை, அடுத்தவர்களின் நலனில் அக்கறை இருக்க வேண்டும் .அப்படின்னு சொன்னாங்க. அவரை போல இல்லாட்டாலும் , அவரது கால்வாசி குணமாவது வர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை“ என்றார்