பிரதமர் மோடியின் 72 ஆவது பிறந்தநாள் - கரூரில் பாஜக சார்பில் கபடி லீக் போட்டி
கடவூர் ஒன்றியம், புலக் காரன் பட்டி, பாரதி இளைஞர் நற்பணி மன்றம் கபாடி அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும் வெற்றி கோப்பையையும் பெற்றனர்.
பாரதப் பிரதமர், மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக மோடி கபடி லீக் போட்டி கரூர் பிரேம் மகால் எதிர்புறம் உள்ள திடலில் செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் இரு நாட்கள் நடைபெற்று வந்தது. கரூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 84 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடின.
இன்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், புலக் காரன் பட்டி, பாரதி இளைஞர் நற்பணி மன்றம் கபாடி அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும் வெற்றி கோப்பையையும் பெற்றனர். இரண்டாம் பரிசாக தோகைமலை ஒன்றியம் தங்காலி பட்டி, பாரதியார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையும் பெற்றனர்.
மூன்றாம் பரிசாக, தோகமலை ஒன்றியம், வடசேரி லயன்ஸ் கிளப் அணியினர் ரூபாய் 25000 மற்றும் வெற்றிக்கோப்பையும் பெற்றனர். நான்காம் பரிசாக, குளித்தலை ஒன்றியம் எழும்பூர் அம்மன் கபடி அணியினர் ரூபாய் 25000 மற்றும் வெற்றிக்கோப்பையும் பெற்றனர்.
இந்த போட்டியில் முதல் பரிசை வென்ற அணியினருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் வெற்றிக் கோப்பையையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் சரத்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், கோபிநாத், நவீன் குமார், செயலாளர்கள் சக்திவேல் முருகன், செல்வராஜ், துணைத்தலைவர்கள் ஈஸ்வரி, செல்வன், பொருளாளர் குணசேகரன், கரூர் தெற்கு நகரத் தலைவர் ரவி, கரூர் வடக்கு நகர தலைவர் வடிவேல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.