குளித்தலை அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
குளித்தலை அருகே குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சரவணனை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி மாரியப்பன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிப்பு
குளித்தலை அருகே குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சரவணனை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி குளித்தலை பங்களா புதூரைச் சேர்ந்த மாரியப்பன் 57 என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓர் ஆண்டு மெய்க்காவால் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
விவசாயி வெட்டிக்கொலை.
முசிறி தாலுகா தாப்பேட்டை அடுத்த குறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை 50. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், இப்போது மனநிலை பாதித்த நிலையில் பல்வேறு நபர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த துரைராஜ் 65 என்ற விவசாயியை செல்லத்துரை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த துறை ராஜு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து செல்ல துறையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய மில் தொழிலாளி மீது வழக்கு
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் காட்டன் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பள்ளபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் 25 என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை அடுத்து கிருஷ்ணகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அப்பெண் ஐந்து மாத கற்பமாக உள்ளார். இதை அடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாலை மறியல் செய்த ஏழு பேர் கைது

கடவூர் அருகே ரெட்டியாப்பட்டியில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து ரெட்டியாபட்டி பஸ் நிலையத்தில் அனுமதி இன்றி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதை அடுத்து மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ராஜா கார்த்திக்கு உட்பட ஏழு பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கஞ்சா பதுக்கியவர்கள் கைது.
பசுபதிபாளையம் அருகே காந்திகிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் வயது 64. இவர் தனது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2000 மதிப்பில் ஆன 200 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூபாய் ஐந்தாயிரம் ஆகியவற்றை பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். இதே போல் புலியூர் அமராவதி நகரில் சதீஷ்குமார் வயது 30 என்பவர் வீட்டில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நடத்திய ஆய்வில் 11 ஆயிரம் மதிப்புள்ள 1100 கிலோ கஞ்சா பிடிபட்டது. சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.





















