மேலும் அறிய

TN Rains | இன்றும் கனமழை.. 50கிமீ வேகத்தில் காற்று.. வானிலை மையத்தின் எச்சரிக்கை!

தெற்கு கடலோர தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும்.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும்  கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடர் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  கொமரின், தெற்கு கடலோர தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால்,மேற்குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் கனமழை குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், சென்னையில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ.,அளவை கடப்பது இது 4-வது முறையாகவும், கடந்த 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மி.மீ.,அளவை கடப்பது 3வது முறையாகவும் பதிவாகியுள்ளது. 

1088 mm - நவம்பர் 1918
1078 mm - அக்டோபர் 2005
1049 mm - நவம்பர் 2015
1003 mm - நவம்பர் 2021 (27  நவம்பர் - 7.30 pm நிலவரப்படி) இது தான் இந்த ஆண்டுக்கான தீவிர கனமழையின் நிலை என்றும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Embed widget