ABP Nadu Exclusive : ’தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி’ அமர்நாத் இராமகிருஷ்ணன்..!
'தமிழ்நாட்டிற்கு மீண்டும் அமர்நாத் இராமகிருஷ்ணன் வருவதை பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்'
![ABP Nadu Exclusive : ’தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி’ அமர்நாத் இராமகிருஷ்ணன்..! It is a pleasure to return to Tamil Nadu - Archaeologist Amarnath Ramakrishna told to ABP Nadu ABP Nadu Exclusive : ’தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி’ அமர்நாத் இராமகிருஷ்ணன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/14/06d505258f748c5d8ad05bf4e12dee5a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கீழடி அகழாய்வு பணிகளை தொடங்கி, தமிழரின் நாகரிகம் இந்தியாவிற்கே முன்னோடி என்பதை உலகறிய வைக்க காரணமான தொல்லியல் துறை அதிகாரியான அமர்நாத் இராமகிருஷ்ணாவை மீண்டும் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமித்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியிருக்கிறது மத்திய அரசு.
![ABP Nadu Exclusive : ’தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி’ அமர்நாத் இராமகிருஷ்ணன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/14/89bd0ba666ca8e8152493a603300ab60_original.jpg)
அமர்நாத் இராமகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவதை மதுரை எம்.பி-யும் எழுத்தாளருமான. சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் ‘மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 14, 2021
தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். pic.twitter.com/VqU5kAjhPM
இது குறித்து ’ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு பேசிய அமர்நாத் இராமகிருஷ்ணா, மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,இங்குள்ள பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, இன்னும் 10 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வந்து தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)