மேலும் அறிய

12 மணல் குவாரிகள் திறக்க திட்டமா? - அன்புமணி இராமதாஸ் கடும் எதிர்ப்பு!

12 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவா காவிரி டெல்டாவை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் போட்டி போடக்கூடாது - அன்புமணி

​சென்னை: தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும், காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக்கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது  குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுற்றுச்சூழலை சீர்குலைப்பது, மணல் கொள்ளையை ஊக்குவிப்பது என இரட்டைத் தீமைகளை இழைப்பவை மணல் குவாரிகள் என்பதை அறிந்தும் அவற்றைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. பெருந்தொற்று காலத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 23 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின் அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன.

திமுக ஆட்சியின் பல்வேறு காலகட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 10 முதல் 12 மணல் குவாரிகளை திறக்க அரசு தீர்மானித்து இருப்பதாகவும், அவை பெரும்பாலும் காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குஜராத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் நிறுவனத்தின் (Bhaskaracharya National Institute for Space Applications and Geo-informatics) மூலம்  செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பதற்காக கூறப்படும் இந்த சாக்குகளை ஏற்க முடியாது.

முதலாவதாக கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க காவிரி பாசன மாவட்டங்களில்  மணல் குவாரிகளை திறப்பது தான் ஒரே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் உள்ளன. இரண்டாவதாக செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவது தடுக்கப்படும்  என்பது சாத்தியமல்ல.

தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. அதில் செயற்கை மணல் ஆதாரங்கள் மூலம் 35 ஆயிரம் சரக்குந்து மணல் பெறப்படும் நிலையில், மீதமுள்ள மணல், குவாரிகள் மூலம் பெறப்படும். ஒவ்வொரு சரக்குந்திலும் தலா 100 கனஅடி கொண்ட 3 யூனிட் மணலை சராசரியாக ஏற்ற முடியும். அதன்படி   புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு மணல் குவாரியிலிருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 2083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023&ஆம் ஆண்டில் 25 புதிய மணல் குவாரிகளைத் திறக்க  மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த போது, அவற்றிலிருந்து அதிகபட்சமாக 7.51 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் வெட்டி  எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.  ஆனால், வெறும் இரு ஆண்டுகளில் 10&க்கும் மேற்பட்ட குவாரிகளில் மட்டுமே 27.70 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை ஆய்வில் தெரியவந்தது தான் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தின் ஆற்று மணல் தேவையை சமாளிக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த அளவை விட 36.40 மடங்கு மணலும், திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையை விட  கிட்டத்தட்ட 10 மடங்கு மணலும் ஒரே ஆண்டில் கொள்ளையடிக்கப்படும் நிலை உருவாகும். அதிகாரப்பூர்வமாகவே இவ்வளவு மணல் எடுக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். இந்த சூழலியல் சீரழிவை சரி செய்யவே முடியாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பதைத் தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற கர்நாடக அரசு துடிக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டுள்ள மணல் குவாரிகள் திறக்கப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன்  தமிழக அரசு போட்டி போடக் கூடாது. 12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஓரிடத்தில் தடுப்பணைகளைக் கட்டவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget