CSK: இது புதுசு.! வீரர்களுக்கு ராசிபலன்.. தமிழ் புத்தாண்டுக்கு காலண்டரை கலராக கொடுத்த சிஎஸ்கே!
ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு பதிவு மூலம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மக்கள் அனைவரும் இன்று சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதன்காரணமாக பல அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடி உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாழ்த்து ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ஒரு தினசரி நாள்காட்டி போல் ஒரு படம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், “எட்டுத்திக்கும் இன்பம் பெருக , உள்ளங்கள் எங்கும் உவகை பொங்க , அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ” எனப் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் உடன் வீரர்களின் பெயருடன் அவர்களுக்கு ராசி பலன் போல் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
எட்டுத்திக்கும் இன்பம் பெருக , உள்ளங்கள் எங்கும் உவகை பொங்க , அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2022
Wishing everyone a Happy and prosperous Tamil New Year! 🥳😍#TamilNewYear #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/HsenjwlZB0
அதன்படி,
ஜடேஜா- துவக்கம்
தோனி-நிதானம்
மொயின் - வலிமை
ருதுராஜ்-உயர்வு
ராயுடு- அக்கறை
உத்தப்பா-நன்மை
பிராவோ-கொண்டாட்டம்
டுபே-திறமை
தீக்ஷணா-திருப்பம்
ப்ரெட்டோரியஸ்-மேன்மை
மில்னே-வேகம்
முகேஷ்-முயற்சி
ஜார்டன் - மேன்மை
Super Kudumbam 🦁 ➡️ Super fans 💛!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2022
வளங்களும், நலன்களும் நிறைய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 😍#விசில்போடு #Yellove 🦁💛 pic.twitter.com/wZacbhscQG
என்று பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை அணியின் வீரர்கள் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹரி சங்கருடன் டேவான் கான்வே ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்