மேலும் அறிய

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒசூரில்‌ பன்னாட்டு விமான நிலையம்‌ அமைக்கப்படும்‌, திருச்சியில்‌ கலைஞர்‌ பெயரில் உலகத்தரம்‌ வாய்ந்த மாபெரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையம்‌ அமைக்கப்படும்‌ என முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து  தமிழ்நாடு சட்டப்‌ பேரவையில்‌ 110 விதிகளின்படி முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அறிவித்து உள்ளதாவது;

''நமது திராவிட மாடல்‌ ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்துத்‌ துறைகளிலும்‌ வளர்ந்து வருகிறது. அதில்‌ மிக முக்கியமானது பெருந்தொழிலகள்‌. வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும்‌, அமைதிமிகு தமிழ்நாடாகவும்‌ இருப்பதால்‌, தமிழ்நாட்டை நோக்கிப்‌ பல்வேறு நிறுவனங்கள்‌ உலகம்‌ முழுவதும்‌ இருந்து தொழில்‌ தொடங்குவதற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள்‌.

நம்பர்‌- 1 மாநிலம்

2022ஆம்‌ ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில்‌ இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்‌- 1” மாநிலமாக முன்னேற்றம்‌ கண்டுள்ளது. மோட்டார்‌ வாகனங்கள்‌, உதிரி பாகங்கள்‌, தோல்‌ பொருட்கள்‌, மின்னணுப்‌ பொருட்கள்‌ ஆகியவற்றின்‌ ஏற்றுமதியில்‌ தமிழ்நாடு இந்தியாவின்‌ முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

புத்தொழில்‌ வளர்ச்சிக்கான மாநிலங்களின்‌ தரவரிசையில்‌, 2020 ஆம்‌ ஆண்டில்‌ கடைசி நிலையில்‌ இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர்‌ அந்தஸ்தைப்‌ பெற்று முதலிடம்‌ பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும்‌ தமிழ்நாட்டினை, 2030 ஆம்‌ ஆண்டிற்குள்‌ “ஒரு ட்ரில்லியன்‌ அமெரிக்க டாலர்‌ பொருளாதாரமாக” உயர்த்திட வேண்டும்‌ என்ற இலக்கினை விரைவில்‌ அடைவதற்காக, தமிழ்நாடு அரசின்‌ தொழில்‌ துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம்‌

மின்னணு மற்றும்‌ மின்‌ வாகனங்கள்‌ உற்பத்தித்‌ துறையில்‌ ஒசூர்‌ கடந்த சில ஆண்டுகளில்‌ முதலீடுகளை அதிகளவில்‌ ஈரத்து வருகிறது. ஒசூர்‌ நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம்‌ தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும்‌ தருவாயில்‌ உள்ளது. ஒசூர்‌ மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மறறும்‌ தருமபுரி பகுதியின்‌ ஒட்டுமொத்த சமூகப்‌ பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்‌ வகையில்‌ ஒசூரில்‌ ஒரு விமான நிலையம்‌ அமைப்பது அவசியம்‌ என இந்த அரசு கருதுகிறது.

ஒசூரில்‌ இரண்டாயிரம்‌ ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌, ஆண்டுக்கு 30 மில்லியன்‌பயணிகளைக்‌ கையாளக்கூடிய வகையில, ஒரு பன்னாட்டு விமான நிலையம்‌ அமைக்கப்படும்‌.

தமிழ்நாட்டின்‌ பிற பகுதிகளில்‌ வசிப்பவர்களும்‌ நூலகங்கள்‌ மூலம் பயன்பெற வேண்டும்‌ என்ற நோக்கில்‌, சங்கம்‌ வைத்து மாத்தமிழ்‌ வளர்த்த மதுரையில்‌ 5- 7- 2023 அன்று கலைஞர்‌ நூற்றாண்டு நூலகம்‌ அமைக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது.

திருச்சியில் மாபெரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையம்‌ 

இதன்‌ தொடர்ச்சியாக, கோயம்புத்தூர்வாழ்‌ பொது மக்களுக்கும்‌ இளைய தலைமுறைக்கும்‌ பயன்படும்‌ விதமாக ஒரு மாபெரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவியல்‌ மையம்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ பெயரில்‌ அமைக்கப்படும்‌ என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ அறிவித்தோம்‌. அதற்கான பணிகள்‌ விரைவில்‌ தொடங்கப்பட உள்ளன.

அந்த வரிசையில்‌ காவிரிக்‌ கரையில்‌ அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில்‌, உலகத்தரம்‌ வாய்ந்த மாபெரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையம்‌ கலைஞர்‌ பெயரால்‌ அமைக்கப்படும்‌''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Embed widget