மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 348 கன அடியில் இருந்து 452 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 451 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 348 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 452 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து 348 கன அடியில் இருந்து 452 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 70.66 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.27 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 348 கன அடியில் இருந்து 452 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manaadu | மாநாடு-க்கு திணறும் விஜய்..போலீஸ் கேட்ட 21 கேள்விகள்..அனுமதி இல்லையா?Mahavishnu Arrested | AIRPORT வந்த மகாவிஷ்ணு..தட்டி தூக்கிய போலீஸ்..நிலவரம் என்ன?Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
"உங்களுக்கு கடவுள் தந்த தண்டனை" வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தோல்வி குறித்து பிரிஜ் பூஷன் பரபர!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
Embed widget