அமைச்சரவை கூட்டத்தில் ரூ. 15 ஆயிரத்து 610 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் - அமைச்சர் தங்கம் தென்னரசு..!
ரூ 15 ஆயிரத்து 610 கோடி அளவிலான புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ரூ 15 ஆயிரத்து 610 கோடி அளவிலான புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் 8 ஆயிரத்து 776 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மின்னணு வாகனம், ஆட்டோ மொபைல், ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், குறிப்பாக தென் தமிழகத்தினை நோக்கி அதிக முதலீடுகள் ஈர்க்கப்படுள்ளன என கூறியுள்ளார்.
மேலும், புதிதாக அமைவுள்ள பரந்தூர் விமான நிலையத்தினை சுற்றி புதிய தொழில் முதலீடுகள் வரவுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். இன்னும் சில கொள்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது அது குறித்து தகுந்த நேரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.