மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பீஸ்ட் வெளியான தியேட்டரில் பெயர் சூட்டு விழா - 2 வயது குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைத்த ரசிகர்
தருமபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தொண்டர் அணி பொறுப்பாளராக உள்ள நவீன்-ஜானகி தம்பதியினரின் இரண்டு வயதான ஆண் குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது
![பீஸ்ட் வெளியான தியேட்டரில் பெயர் சூட்டு விழா - 2 வயது குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைத்த ரசிகர் In occasion of beast movie release, Vijay fan named his baby in a theatre at Dharmapuri பீஸ்ட் வெளியான தியேட்டரில் பெயர் சூட்டு விழா - 2 வயது குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைத்த ரசிகர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/13/32c8872109db9c4edeb89aa30b426218_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா வைத்த விஜய் ரசிகர்
தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று முதல் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள திரையரங்கில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று காலை முதல் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் திரையிடப்படுவதை விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலில் மிகுந்த ஆரவாரத்துடன் திரையரங்குகளில் கூடி படத்தை கொண்டாடி வருகின்றனர்.
![பீஸ்ட் வெளியான தியேட்டரில் பெயர் சூட்டு விழா - 2 வயது குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைத்த ரசிகர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/13/94c85e2c02f5e75b243fd5ae6b1fcc9f_original.jpg)
இந்நிலையில் தருமபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தொண்டர் அணி பொறுப்பாளராக உள்ள நவீன்-ஜானகி தம்பதியினரின் இரண்டு வயதான ஆண் குழந்தைக்கு பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெயர் சூட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படத்தை கொண்டாடும் வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் வீரராகவன் என்ற பெயரை, இந்த ஆண் குழந்தைக்கு ரசிகர்கள் சூட்டி மகிழ்ந்தனர். இந்த பெயர் சூட்டும் விழாவில் பீஸ்ட் என, பெயர் எழுதி வைத்து கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் திரைப்படம் வெளியானதை வெகு விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், திரையரங்கிலே விஜய் ரசிகர் பெயர் குழைந்தைக்கு சூட்டு விழா நடத்திய மகிழ்ந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion