மேலும் அறிய
Advertisement
Tamil news | கோயிலில் கொள்ளையடித்தவர் சிக்கினர்...முல்லைப் பெரியாறு நிலவரம்... செல்லூர் ராஜூ டாக் - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
நாங்கள் ரிட்டையர் ஆயிருவோம். இன்னும் எவ்ளோ நாள் இருக்க போகிறோம் என மதுரையில் கட்சி நிர்வாகிகளிடையே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார்.
1. நெல்லை மாவட்டம் விஜயநாராயணம், பணகுடி பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் கோயில்களில் நகைகளை திருடிய வழக்கில் இருவர் கைது - 16 கிராம் தங்கம், 2 வெள்ளி கண்மலர் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல்.
2. தூத்துக்குடியில் ட்ரைல்ப்ளேசர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் சேவையை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடம்பூர், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சிகளிலும் மதிமுகவுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக குறைந்தது.
5. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே 22 கிலோ கஞ்சா வைத்திருந்த தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யபட்டனர்.
6. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
7. சிவகங்கை அருகே காலனியைச் சேர்ந்த தம்பதி செந்தில்குமார், காளிமுத்து. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். செந்தில்குமார் விறகு வெட்டும் தொழில் செய்கிறார். இந்நிலையில் மூத்த மகள் ஸ்நேகா நீட் தேர்வில் 199 மதிப்பெண் எடுத்த நிலையில் தனியார் கல்லூரியில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது. கூலித் தொழிலாளியின் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
8. மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த 14 பேரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
9. நாங்கள் ரிட்டையர் ஆயிருவோம். இன்னும் எவ்ளோ நாள் இருக்க போகிறோம் என மதுரையில் கட்சி நிர்வாகிகளிடையே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார்.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 426 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89138 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 614 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 83641-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1215 இருக்கிறது. இந்நிலையில் 4282 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion