ராமநாதபுரம், தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Rain Prediction: "ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (17-12-2025) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு"

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (17-12-2025) காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்திருந்தது. இந்தநிலையில் நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்று
தமிழக பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது. தமிழ்நாட்டில் வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்கள் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை சில இடங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இன்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை
தென் மாவட்டங்களில் இன்று (17-12-2025) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கணமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை நேரங்களில் மழை பெய்ய உள்ளதால், பள்ளிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





















