Ilam Bahavath IAS: தொடரும் அதிரடிகள்; தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்
பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த இளம்பகவத் ஐஏஎஸ்ஸை தூத்துக்குடி ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் அடிக்கடி நிகழும் நிலையில், தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ்ஸை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, முதல்வரின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இளம்பகவத் ஐஏஎஸ் ஏற்கெனவே பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளரே மாற்றம்
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த சிவ்தாஸ் சிங்மீனாவை தமிழக அரசு நேற்று கட்டிட மனை ( ரியல் எஸ்டேட்) ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளர் ஆவார். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இரண்டாவது தமிழரும் முருகானந்தமே.
காலியான இணைச் செயலாளர் பதவி
இந்த நிலையில், முதல்வரின் இணைச் செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமைச் செயலாளராக நியமிக்கபட்ட நிலையில், இணைச் செயலாளர் பதவி இடம் காலியாக இருந்தது. இதை அடுத்து தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, முதல்வரின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த இளம்பகவத் ஐஏஎஸ்ஸை தூத்துக்குடி ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: ABP Exclusive | இல்லம் தேடிக் கல்வி ஏன் அவசியம்? எப்படி?- இளம்பகவத் ஐஏஎஸ் சிறப்புப் பேட்டி