மேலும் அறிய

மாணவர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ரெனால்ட் நிசான் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் ஐஐடி மெட்ராஸ்!

மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் கைக்கோர்க்க உள்ளது.

ரெனால்ட் நிசான் டெக்னாலஜி - பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் கைக்கோர்க்க உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஐஐடி மெட்ராஸ், இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 

மாணவர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்:

இந்தக் கூட்டாண்மையின் மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் ஈடுபட்டுள்ள 35,000 மாணவ-மாணவிகளுக்கு உள்ளகப் பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை சென்னை ஐஐடி வழங்கும். திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும்.

இந்தக்கூட்டு முயற்சியின் அடிப்படையில் ரெனால்ட் நிசான் டெக் நிபுணர்கள் தலைமையிலான குழுவினர் வழிகாட்டுதல் திட்டங்கள், கலந்தாலோசனை அமர்வுகள், தலைமைப் பண்புக்கான உரையாடல்கள் மூலம் கல்வி அனுபவத்தை மேம்படுத்த உள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி, சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

ரெனால்ட் நிசான் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் ஐஐடி:

இந்த கூட்டாண்மையை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், “ரெனால்ட் நிசான் டெக் நிறுவனத்துடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்விக்கும் கார்ப்பரேட் உலகங்களுக்கும் இடையே இணைப்பைக் கட்டமைக்கும். இது, ஐஐடி மெட்ராஸின் தொலைநோக்குப் பார்வைக்கு ‘சிறந்த எடுத்துக்காட்டு.

ரெனால்ட் நிசான் டெக் நிறுவனமும் சென்னை ஐஐடியும் இணைந்து, பல்வேறு படிப்புகளை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் ஒத்துழைப்புக்கான அளவுகோலை நிர்ணயிக்கின்றன. பெருநிறுவனங்கள் துறையுடன் இதுபோன்ற மேலும் பல ஈடுபாடுகளை எதிர்பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டு முயற்சி குறித்துப் பேசிய ரெனால்ட் நிசான் டெக் நிர்வாக இயக்குநர் டெபாசிஸ் நியோகி, "கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான கூட்டு முயற்சியில் புதுமைகளை வளர்ப்பதற்கும் எதிர்காலத்தில் வரவிருக்கும் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த ஒத்துழைப்பு இன்றியமையாதது எனக் கருதுகிறோம்.

சென்னை ஐஐடி உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், தொழில் வல்லுநர்களை மேம்படுத்தும். அத்துடன் வாகன மற்றும் தொழில்நுட்பத்துறையில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ளும் அமைப்பை உருவாக்கும். தொழில்துறை தலைவர்களையும் நாளைய தீர்வுகளையும் ஒரே நேரத்தில் நாங்கள் உருவாக்குகிறோம்” என்றும் அவர்  குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி-யின் (மக்கள் தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையம்) தலைவரும் பிஎஸ் பட்டப்படிப்பு மற்றும் என்பிடெல் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் பேசுகையில், “இந்த ஒத்துழைப்பு கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள கூட்டுறவை பிரதிபலிக்கிறது.

இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பலத்தையும் பலன்களையும் பெறுகின்றனர். பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகள், வழிகாட்டுதல் திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் வாயிலாக ரெனால்ட் நிசான் டெக் அளித்துவரும் ஆதரவு சென்னை ஐஐடி மாணவர்களின் கற்றல் பயணத்தை மேம்படுத்துகிறது" என்றார்.

தலைப்பு செய்திகள்

62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget