மேலும் அறிய

கோவிந்தராஜ் கொலை வழக்கில் கடலூர் எம்.பியை கைது செய்யாவிட்டால் போராட்டம் - பாமக எச்சரிக்கை

ஓரிரு நாட்களில் கைது செய்ய வேண்டும் இல்லையெனில் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் - பாமக துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன்

கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (வயது 55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம்தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின் கோவிந்தராஜின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோவிந்தராஜின் உடல் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர், பின் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இறந்த கோவிந்தராஜின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நான்கு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது.
 
கோவிந்தராஜ் கொலை வழக்கில் கடலூர் எம்.பியை கைது செய்யாவிட்டால் போராட்டம் - பாமக எச்சரிக்கை
 
அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டார், அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ADSP கோமதி தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட குழு பண்ருட்டியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக கோவிந்தராஜ் அவர்களின் மகன் மற்றும் காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நந்தகுமார், சிறப்பு துணை ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் பாஸ்கர், உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இதில் காடாம்புலியூர் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையின் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, அதற்கு பின் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இறந்த கோவிந்தராஜ் அவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் காடம்புலியூர் காவல் நிலையத்தில் காயங்களுடன் இருக்கும் கோவிந்தராஜின் புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடலூர் எம்பி ரமேஷ் அவர்களின் முந்திரி தொழிற்சாலை பணிபுரியும் ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் கோவிந்தராஜ் எம்பி ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்து, கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் எம்பி ரமேஷை தவிர மற்ற 5 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவிந்தராஜ் கொலை வழக்கில் கடலூர் எம்.பியை கைது செய்யாவிட்டால் போராட்டம் - பாமக எச்சரிக்கை
 
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான எம்பி ரமேஷ் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கடலூர் பாமக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாவட்ட துணைப்பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன்: கோவிந்தராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம் பின் அதனை ஏற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்துவிடுவோம் என கூறியுள்ளனர், அதன்படி அவரை கைது செய்ய வேண்டும் இல்லையெனில் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் என கூறினார்.

தலைப்பு செய்திகள்

கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget