Watch Video : பிளாஸ்டிக்கை உண்ணும் யானை.. கையை மீறிய சோகம்..! ஐ.ஏ.எஸ். அதிகாரி வேதனை..
Watch Video : யானை ஒன்று பிளாஸ்டிக்கை மெல்லுவது போன்ற காட்சி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
யானை ஒன்று பிளாஸ்டிக்கை மெல்லுவது போன்ற காட்சி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பிளாஸ்டிக் :
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன், கவனக்குறைவாக அப்புறப்படுத்தப்பட்டால், நம்மைச் சுற்றியுள்ள வனவிலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இத்தகைய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கு தடையை விதித்தாலும், சேதத்தை குறைக்க, இதுவரை பெரிய அளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக மாறியது எப்படி என்பது ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.
When humans become slaves of throwaway plastic the price is paid by wild animals. Its a tragedy beyond measure 😢
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 18, 2022
Video - shared #stopplasticpollution #ClimateCrisis pic.twitter.com/FSPCbmkIEV
பிளாஸ்டிக் உண்ணும் யானை :
அவர் பகிர்ந்த விடியோவில் யானை ஒன்று தனது தும்பிக்கையில் பிளாஸ்டிக் கவரை எடுத்து, பின அதனை வாயில் வைத்து மெல்லுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவிற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மக்காத தன்மை கொண்ட நெகிழியின் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்யவேண்டிய அவசர நிலையில் உலக நாடுகள் இயங்கி வருகிறது.
நெகிழி பொருட்கள் :
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக ஹிமாலச்சப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் முழு தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நெகிழி பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு அண்டைய மாநிலமான கேரளா நெகிழிகளுக்குத் தடை விதித்தது. 2019-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிரப்பட்ட கிளிப், "மனிதர்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கின் விலைவை விலங்குகள் அனுபவிக்கின்றன, இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு கொடுமையாக உள்ளது” என பதிவிட்டிருந்தார். அவர் பகிர்ந்த காட்சியில் யானை ஒரு பிளாஸ்டிக் பையை மென்று உண்ணும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பிளாஸ்டிக் தடை :
இதைத்தொடர்ந்து, ஜூலை 5ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பஞ்சாப் அரசும் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில், குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கூட பிளாஸ்டிக் பயன்பாடு பெரிய அளவு குறையவில்லை என்பதே நிதர்சமான உண்மை.