மேலும் அறிய

அண்ணாமலை குற்றச்சாட்டில் எது உண்மை? எது பொய்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ஹெல்த்மிக்ஸ் டெண்டர் குறித்து பா.ஜ.க. முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஹெல்த்மிக்ஸ் தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமாலை முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு   அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். 

ஊட்டச்சத்து மாவு கொள்முதல் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ஊட்டச்சத்து மாவை ஏன் ஆவினில் வாங்கவில்லை என்று கேட்கிறார்கள். அதனால் அரசிற்கு நஷ்டம் ஏற்படும் என்கின்றர். ஆனால். அதில் உண்மையில்லை. இந்த ஹெல்த்மிக்ஸ் திட்டம் ஏற்கனவே இருந்த அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வந்ததுதான். அதுவே இப்போதும் தொடர்கிறது. இந்தத் திட்டத்தின் கூழ் வழங்கப்படும் ஹெல்த்மிக்ஸ் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்தது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த ஹெல்த்மிக்ஸ் விலை சந்தையில் ரூ.588 ஆக இருக்கிறது. ஆனால், டெண்டர் விடப்படுவது ரூ.460 தான். இந்த விலைக்குத்தான் அரசு கொள்முதல் செய்ய இருக்கிறது.

இதனால் அரசுக்கு ரூ.128 செலவு மிச்சம்தான். மேலும், இந்த ஊட்டச்சத்து மாவை ஆவினிலிருந்து கொள்முதல் செய்ய முடியாது. கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டுவது ஆதரமற்றது. இது ஊட்டச்சத்து அல்ல. டீ, காபி போல பாலில் கலந்து குடிக்கவே மக்கள் பயன்படுத்துவார்கள். சந்தை விலையை விட அதிகம் காசு கொடுத்து வாங்கினால் தவற எனச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், நாங்கள் அப்படி செய்யவில்லை.  இந்நிலையில், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாடுவது சரியானது அல்ல. தமிழ்நாடு அரசு சார்பில் ஹெல்த்மிக்ஸை ஆவினில் வாங்குமாறு எந்த அறிவுறுத்தலும் இல்லை. ” என்றார். 

மேலும், அவர் பேசுகையில்,  “நாங்கள் இதற்கு ஏற்கனவே தெளிவாக பதிலளித்துவிட்டோம். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார், அண்ணாமலை. டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது. நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் திறக்கப்பட உள்ளது. அதில், விலை மற்றும் தரம் ஆகிவற்றின் அடிப்படையிலேயே டெண்டர் வழங்கப்பட இருக்கிறது. டெண்டருக்கு முன்பே, இவருக்குத்தான் வழங்க இருக்கிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுவது எப்படி நியாமாகும்? இல்லை, ’டெண்டர் இவருக்கு கொடுக்கப்பட உள்ளது’ என்று சொல்பவருக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்கிறார்களா என்பதும் புரியவில்லை. ஆவினில் விலை குறைவு என்பதற்காக அவர்களிடம் கர்ப்பிணிகளுக்கான கிட்-க்காக பொருட்கள் வாங்க முடியுமா? நாங்கள் வழங்கும் ஊட்டச்சத்து மாவில் கர்ப்பிணிகளுக்கு தேவையான, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த் 32 சத்து பொருட்கள் அடங்கியுள்ளது. இதற்கான ஏற்ற நிறுவனத்தை கண்டறிந்துதான் டெண்டர் விடப்படும். ஆனால், ஆவினில் வாங்கினால் நிதிச்சுமை குறையும் என்பதேல்லாம் பொருத்தமற்ற காரணமாக இருக்கிறது. “ என்றார்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக பேசிய  மருத்துவத் துறை செயலளார், ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இன்னும் டெண்டர் இறுதி செயப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆப்பிள் பழத்தை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது; ஒப்பிட கூடாது என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. ஆனால், இந்த விஷயத்தில் குற்றம்சாட்டுபவர்கள் ஆப்பிளோடு நெல்லிக்காயை ஒப்பிட்டுவது போல் இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கான கேர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஹெல்த்மிக்ஸை ஆவினில் வாங்க முடியாது. இது ஒன்றும் பால்பவுடர் இல்லை. இதில் என்ன சேர்க்கப்பட்டிருக்கிறது, தரம் ஆகியவைகள் முக்கியம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பெட்டகத்தில் வாங்கப்படும் நெய் ஆவினிலிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஹல்த்மிக்ஸை ஆவினில் வாங்க முடியாது. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியபடிதான் அதற்கேற்ற சத்துப்பொருட்களைதான் வாங்க முடியும்.” என்றார்.
 
தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம்  என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு சார்ப்பில் விளக்கமளித்ததில், 2018 ஆம் ஆண்டில் 11 நிபுணர்களுடன் கூடிய குழு அமைத்து மதர் ஹெல்த்கேர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இரத்த சோகை, சிசு மரணம் உள்ளிட்டவைகளை தவிர்பதே இதன் நோக்கம் என்றும், இதில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 32 சத்து பொருட்கள் இருக்கின்றன என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget