Double Mask to prevent Corona | டபுள் மாஸ்க்கிங் - நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?
கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரித்துவரும் சூழலில் வெளியே செல்லும்போது டபுள் மாஸ்க் எப்படி அணியவேண்டும் என்று தெரியுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை முதல் அலையை விட மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் நாம் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சானிடைசர்கள் வைத்து கழுவுவது ஆகியவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.
தற்போது நோய்த்தொற்று சூழல் மிகவும் அதிகரித்து வருவதால், நாம் வெளியே செல்லும்போது இரண்டு முகக்கவசம் அணிந்தால் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டபுள் மாஸ்கிங்கில் பின்பற்றவேண்டிய முறைகள் மற்றும் பின்பற்றக்கூடாத முறைகள் என்னென்ன?
டபுள் மாஸ்கிங் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு மருத்துவ மாஸ்க் அணிய வேண்டும். அந்த மாஸ்க் மீது 2 அல்லது 3 லேயர்கள் கொண்ட துணி முகக்கவசத்தை அணிய வேண்டும். இரண்டாவது முகக்கவசத்தை முதல் கவசத்தில் மூக்குப்பகுதியை மறைக்கும் விதத்தில் அணிய வேண்டும். எனினும் எளிதாக மூச்சுவிட வசதியாக இரண்டாவது முகக்கவசத்தை அணிய வேண்டும். இப்படி செய்வதே சரியான டபுள் மாஸ்கிங் முறை ஆகும்.
#Unite2FightCorona
— PIB in KERALA (@PIBTvpm) May 9, 2021
The Dos and Dont's while #DoubleMasking...Take a look👇#PIBKochi @COVIDNewsByMIB @PIB_India @KirenRijiju @BSF_India @CRPF_sector @cpmgkerala @crpfindia @GMSRailway pic.twitter.com/hH8nY9Og38
டபுள் மாஸ்கிங் செய்ய கூடாதவை:
ஒரே வகையான இரண்டு முகக்கவசங்களை அணியக்கூடாது. அதாவது இரண்டு மருத்துவ மாஸ்க் அல்லது இரண்டு துணி மாஸ்க் அணிய கூடாது. மேலும் மருத்துவ மாஸ்க் மீது அணியும் துணி முகக்கவசத்தை தினமும் அணியக்கூடாது. தினமும் அதை மாற்ற வேண்டும். அத்துடன் பயன்படுத்திய துணி முகக்கவசத்தை துவைக்காமல் பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு இரண்டு முகக்கவசங்கள் அணியும் போது நாம் வல்லுநர்கள் கூறும் விஷயங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளமுடியும்.