Tamil Nadu Weather Update: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடக்கும்?
தமிழகத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது விடிய விடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுர மாவட்டத்திற்கும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது விடிய விடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும். பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். அதேநேரத்தில் இந்த இரு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
17ம் தேதி நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.





















