மேலும் அறிய

Central Govt: 14 மாநிலங்களில் பேரிடர் தடுப்பு பணிகள் - தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? மத்திய அரசு அதிரடி

Central Govt: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Central Govt: மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கு ரூ.2514.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு:

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தலைமையில் ஒரு உயர்மட்ட குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

பல்வேறு மாநிலங்களுக்கான திட்டங்கள்:

தெலங்கானா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் ரூ.60 கோடி செலவில் ஆறு திட்ட முன்மொழிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஆறு பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கு 2514.36 கோடி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கான திட்டங்கள்:

முன்னதாக, எச்எல்சி, நவம்பர் 27, 2023 அன்று , சென்னை நகரில் வெள்ள மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த தீர்வுகளுக்கான திட்ட முன்மொழிவுக்கு ரூ. 561.29 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதலாக அசாம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு "மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல்" திட்டத்தின் கீழ் ரூ.810.64 கோடி மதிப்பிலான மூன்று திட்ட முன்மொழிவுகளுக்கு உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (NDRF) கீழ் 5000 கோடி இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், ஏற்கனவே 11 மாநிலங்களின் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ. 1691.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு பயிற்சி:

NDRF இலிருந்து ரூ.470.50 கோடி செலவில் யுவாஆப்தமித்ரா திட்டத்தின் (YAMS) திட்டத்திற்கு உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டின் 315 பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில், 1300 பயிற்சி பெற்ற ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு மாஸ்டர் ட்ரெய்னர்களாகவும், 2.37 லட்சத்திற்கும் பயிற்சி அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். NCC, NSS, NYKS மற்றும் BS&G (பாரத் சாரணர்கள் & வழிகாட்டிகள்) ஆகியவற்றிலிருந்து பிரத்தியேகமாக இளைஞர்களை, எந்த ஒரு பேரிடரின் போதும் சேவையில் ஈடுபடுத்த தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசாங்கம் “ஆப்தா மித்ரா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ் நாட்டின் 350 பேரிடர் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திறமையான மற்றும் பயிற்சி பெற்ற 'அப்தா மித்ராஸ்' மற்றும் 'அப்தா சாகிஸ்' ஆகியோர் எந்த ஒரு பேரழிவையும் எதிர்கொள்வதில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நடப்பு நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் 14 மாநிலங்களுக்கு 6348 கோடி ரூபாயும், மாநில பேரிடர் தணிப்பு நிதியின் (SDMF) கீழ் 6 மாநிலங்களுக்கு 672 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (NDRF) கீழ் 10 மாநிலங்களுக்கு ரூ.4265 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
Embed widget