வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை ஜூன் 20 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து விதிகள் :
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி , தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் அரசு வாகங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தது. மேலும் , இந்த விதிமுறைகளானது, வரும் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். ஆனால் பலரும் தங்களது நம்பர் பிளேட்டில் ஆன்மீகம், அரசியல், சினிமா போன்றவற்றை மையப்படுத்தி நம்பர் பிளேட்டுகளை வைத்திருப்பதை பார்க்க முடிந்தது.

பறிமுதல் செய்ய வேண்டும்:
இந்நிலையில், சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை ஜூன் 20 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இது குறித்தான உத்தரவுகளை ஜூன் 20 பிறப்பிக்கும் போது, வாகன நம்பர் பிளேட் குறித்தான விரிவான தகவல் தெரிய வரும்.





















