Madras Highcourt: முரசொலி அலுவலக நிலம்: தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![Madras Highcourt: முரசொலி அலுவலக நிலம்: தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.. High Court has said that the National Commission for Scheduled Castes can investigate the complaint that Murasoli's office is located on Panchami land Madras Highcourt: முரசொலி அலுவலக நிலம்: தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/45d99a25f60cbdfea9ea130604a2fc6e1704864729864589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடந்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று தீர்ப்பளித்தார்.
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட நிலம் மாதவன் நாயர் என்பவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்கப்பட்டதாகவும், பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டுக்கு முன்பான ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
அப்போது வழக்கு விசாரணையின் போது, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)