கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், சிறுவர்கள் சோகத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், சிறுவர்கள் வேதனையில் உள்ளனர். சிறுவர்கள் இப்படி மழை பெய்தால் எப்படி பட்டாசு வெடிப்பது என்று சிறுவர்கள் சோகத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கனமழை
கரூர் மாவட்டத்தில், வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், கரூரில் காலை முதல் வெயில் அடித்தது. ஆனால், மாலை 6 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையால் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
கரூர், ஜவஹர் பஜார், சின்னாண்டாங் கோயில், எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, லைட் ஹவுஸ், சுங்ககேட், திருமாநிலையூர், ராயனூர், தாந்தோணி மலை, செல்லாண்டிபாளையம், பொன் நகர், சுக்காலியூர், பசுபதிபாளையம், ராமானுர், காந்திகிராமம், வாங்கப்பாளையம், வெங்கமேடு, அரவக்குறிச்சி, ஆறு ரோடு, வையாபுரி நகர், 8 வழி சாலை, கிருஷ்ணராயபுரம், அணைப்பாளையம், க.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி மேலும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்து கொண்டாட முடியாதபடி மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கழிநீர் தேங்கி சுகாதாரக் கேடு
கரூரிலிருந்து கோவை மற்றும் ஈரோடு செல்லும் சாலையில் திருக்காம்புலியூர் பிரதான வாய்க்கால் உள்ளது. இது நகரின் பல்வேறு பகுதிகளில் வழியாக செல்கிறது. இதில் அதிக அளவு மழை வருவதால், கழிநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது மழை அதிகமாக பெய்து வருவதால் வீட்டிற்குள் தண்ணீர் வரும் வாய்ப்புள்ளது. இதனால், கழிவுநுரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மழை நீரை வீணாக்காமல் ஆறுகள், குளங்கள், கிணறுகள், ஓடைகளை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு
மழை வந்தும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் அருகில் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தார் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு அணைக்கப்பட்டு, அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு, அதன் அருகில் நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. மின்மோட்டார் மூலம் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்துதன் காரணமாக, மின் மோட்டாரை எடுத்துச் சென்றனர். மீண்டும் அப்பகுதியில் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.