TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20.09.2023 முதல் 23.09.2023: வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.09.2023 மற்றும் 25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): புதுக்கோட்டை 9, களியல் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), நாகுடி (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), மணியாச்சி (தூத்துக்குடி), மாதவரம் AWS (திருவள்ளூர்) தலா 7, CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), மாதவரம் (சென்னை), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தொண்டி (ராமநாதபுரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), ஓட்டன்சத்திரம் (தூத்துக்குடி) தலா 6, மதுராந்தகம் (செங்கல்பட்டு), எம்ஜிஆர் நகர் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), புலிப்பட்டி (மதுரை), ஆயின்குடி (புதுக்`கோட்டை), தீர்த்தண்டானம் (ராமநாதபுரம்), வட்டானம் (ராமநாதபுரம்), பயணியர் விடுதி சிவகங்கை, சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை), செங்கம் (திருவண்ணாமலை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
19.09.2023: குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
19.09.2023: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
19.09.2023: கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.