TN Rain Alert: வால்பாறையில் 7 செ.மீ.. தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை அபாயம்..! உங்கள் மாவட்டத்தில் எப்படி?
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
01.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வால்பாறை பிஏபி (கோவை மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்) தலா 7, ஒகேனக்கல் (தருமபுரி மாவட்டம்), கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) தலா 5, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம்), கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்), சின்னக்களர் (கோவை மாவட்டம்), கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்), பெரியபட்டி (மதுரை மாவட்டம்), சின்கோனா (கோவை மாவட்டம்), காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்), மேல் பகுதி கூடலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 4, சோழவந்தான் (மதுரை மாவட்டம்), ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்), ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி மாவட்டம்), சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்), மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்),
சின்னார் அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்), சித்தம்பட்டி (மதுரை மாவட்டம்), வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்), வால்பாறை பி.டி.ஓ (கோயம்புத்தூர் மாவட்டம்), உப்பார் அணை (திருப்பூர் மாவட்டம்) தலா 3, தாளவாடி (ஈரோடு மாவட்டம்), நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), அரண்மனைப்புதூர் (தேனி மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), கல்லந்திரி (மதுரை மாவட்டம்), பெருஞ்சாணி அணை (மாவட்டம் கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), தல்லாகுளம் (மதுரை மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), பேரையூர் (மதுரை மாவட்டம்), புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), சிவகாசி (விருதுநகர் மாவட்டம்), கிளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
01.06.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02.06.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.06.2023 மற்றும் 04.06.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், இலட்சதீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.