School Leave: விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை எச்சரிக்கை, ஆட்சியர் அறிவிப்பு!
Villuppuram School leave: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று (03.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Viluppuram school leave விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று (03.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவிப்பு.
மழை எச்சரிக்கை என்ன ?
தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. மேலும், தமிழ்நாட்டை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் சென்னைக்கு அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, தற்போது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரம் வரை அதே நிலையில் இருந்து, பின்னர் மேலும் வலுவிழந்து, சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை அடங்கும். சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படவில்லை என்றாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள சூழலில் இன்று (03.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள்!
மேலும், பொதுமக்கள் கனமழை தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களான
கட்டணமில்லா அழைப்பு எண் 1077, புகார் தொலைபேசி எண்: 04146 - 223265,
விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04146 222554
விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் - 04146 233132
திருவௌர்ஜெணய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04153-234789
கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04153231666
வானூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 0413-2677391
திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04147-222090
மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04147 239449
செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04145222007
மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் 04145-234209 ஆகிய எனர்களை தொடர்புகொள்ளலாம்.





















