கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தமிழ்நாடு அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளதால் சொர்க்கவாசல் திறப்புக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காலை 6 மணி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்
கரூர் மாவட்டம், மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சுவாமி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமிக்கு அதிகாலை 4 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகளுடன், தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அபய பிரதான ரெங்கநாதசுவாமி மேளதாளங்கள் முழங்க சொர்க்கவாசல் வழியாக காட்சியளித்தார். அதை தொடர்ந்து ஆலயத்தில் பட்டாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்ட பிறகு சுவாமியை தோளில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்த பிறகு ஆலய மண்டபத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
தியாகராஜ சுவாமிகள் ஆராதனை நிகழ்ச்சிகள் ரத்து - 22ஆம் தேதி ஒருநாள் மட்டும் விழா நடத்த முடிவு
அது தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தமிழக அரசின் தொற்று பரவல் காரணமாக கைவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சொர்க்கவாசல் திறப்பு பின்னர் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
அதைத் தொடர்ந்து கரூர் நகர பகுதியில் உள்ள ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திருவீதி விழாவை முன்னிட்டு பண்டரிநாதன் ஆலயத்தில் மேளதாளங்கள் முழங்க ரக வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஸ்வாமி திருவீதி உலா வந்த பின்னர் மீண்டும் ஆலயம் குடிபுகுந்தார். ஆலயம் குடிபுகுந்த சுவாமி ஸ்ரீ பண்டரிநாதனுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்
23 ஆவது திவ்ய தேசமான சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு