மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்: தமிழகத்தில் இருந்து 23 புதிய ரயில்கள் இயக்கம்!

தமிழகத்தில் இருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.


ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்: தமிழகத்தில் இருந்து 23 புதிய ரயில்கள் இயக்கம்!

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தை உள்ளடக்கியதாக தெற்கு ரயில்வே மண்டலம் உள்ளது.

தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி இயக்கியுள்ளது. அத்துடன் ஏற்கனவே இயக்கப்பட்டுவரும் ரயில்களும் புதிய இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் புதிய ரயில் நிலைய நிறுத்தங்களையும் தெற்கு ரயில்வே செயல்படுத்தியுள்ளது.


ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்: தமிழகத்தில் இருந்து 23 புதிய ரயில்கள் இயக்கம்!

தமிழகத்தில் இருந்தும், வெளி மாநில நிலையங்களில் இருந்தும் என மொத்தம் 23 புதிய ரயில் சேவைகள் ஓராண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், கேரளத்துக்கு 14 ரயில்களும் கா்நாடகத்துக்கு 5 ரயில் சேவைகளும் உள்ளன. அத்துடன் கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் ஜல்பைகுரி-நாகா்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி அம்ருத் பாரத் விரைவு ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் விரைவு ரயில், பெங்களூரு-எா்ணாகுளம் வந்தே பாரத் விரைவு ரயில் ஆகியவை முக்கியமானவையாகும். தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ருத் பாரத் விரைவு ரயில் இரு மாநில தலைநகா்களை இணைக்கும் குறைந்த அளவிலான கட்டண சேவையாகும். அத்துடன் சேலம்-ஈரோடு, பாலக்காடு-பொள்ளாச்சி, கொல்லம்-எா்ணாகுளம் என மெமு ரயில்களும் புதிதாக இயக்கப்பட்டுள்ளன.

அதேபோல, ஓராண்டில் 80-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரயில் கால அட்டவணை சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 65 என தெற்கு ரயில்வே பகுதியில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget