Gram Sabha Meeting: கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி கெளரவித்த கரூர் ஆட்சியர்
5 தூய்மை பணியாளர்கள் சேவையினை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எலவனூர் பகுயில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதையொட்டி கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் எலவனூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கிராமச்சபை கூட்டத்திற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ முன்னிலை வகித்தார். எவ்வனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி தலைமை வகித்தார் இக்கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குறித்தும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்தும், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இக்கிராமசபை கூட்டத்தில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் 5 தூய்மை பணியாளர்கள் சேவையினை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து வாக்காளர் தினம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றுக்கொள்ள அனைத்துத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.