மேலும் அறிய

நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்: போராடி கைதான மாணவர்கள்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிராக போராடிய மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். 

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு கோரி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.


நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்: போராடி கைதான மாணவர்கள்

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் சூழலில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமிளத்துள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், இதுதொடர்பாக பிப்ரவரி ஐந்தாம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்: போராடி கைதான மாணவர்கள்

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிராக மாணவர் அமைப்பினர் இன்று கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

முன்னதாக நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பியது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார்.இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: NEET Exemption Bill: நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்..!

”ஏற்க முடியாது; அன்றே அண்ணா ஆளுநரைப்பற்றி சொன்னார்....” - நினைவு கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தோழிகளுடன் சந்திப்பு.. மகிழ்ச்சியில் திளைத்த 130 பெண் போலீசார்!

தலைப்பு செய்திகள்

“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
மேற்கு வங்க முதியவரின் சிக்கலான மூட்டு பாதிப்பு: தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
மேற்கு வங்க முதியவரின் சிக்கலான மூட்டு பாதிப்பு: தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
Udumalpet Power Cut:  உடுமலைப்பேட்டையில் நாளை (09-10-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - இதோ முழு லிஸ்ட்
 உடுமலைப்பேட்டையில் நாளை (09-10-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - இதோ முழு லிஸ்ட்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Embed widget