பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் : பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பேச்சு..
தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியின் சிறப்பு பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164 பட்டமளிப்பு விழா தற்போது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் முக ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த பிறகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.
#BREAKING | தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிhttps://t.co/wupaoCQKa2 | #UniversityofMadras #TNGovt #MKStalin #Ponmudy #RNRavi pic.twitter.com/wqPwOzElFx
— ABP Nadu (@abpnadu) May 16, 2022
இந்தநிலையில், சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அதில், “தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியின் சிறப்பு பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். தமிழ் மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக கொண்டு வர வேண்டும். பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழங்களில் தமிழ் மொழிக்கான இருக்கையை அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

