மேலும் அறிய

"யாரைக் கேட்டு விஜய்க்கு கான்வாய்?” - ஆளுநரின் அதிரடி கேள்வியால் திணறிய அரசு அதிகாரிகள் - நடந்தது என்ன?

யாரை கேட்டு விஜய்க்கு, முதலமைச்சர் அந்தஸ்த்துக்கான பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டது? - ஆளுநர் கேள்வி

எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் அந்தஸ்த்திற்கான பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் கொடுப்பட்டது ? என்று தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆளுநர் அர்லேகர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பெரும் கட்சியாக தவெக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜயின் தவெக கட்சி 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதனால், தவெக ஆட்சியமைக்கப்போகும் என்றும் விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால், புதிய ஆட்சி மாற்றத்திற்கான அனைத்து வேலைகளையும் அரசு அதிகாரிகள் செய்து வந்தனர். வாக்கு எண்ணிக்கை நாளான மாலையில் விஜய்க்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டது.

ஆனால், விஜயால் இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், அவருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு விலகிக்கொள்ளப்பட்டது தவெகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், விஜய் கேட்டுக்கொண்டதற்காக பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக அக்கட்சியை சேர்ந்த நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

 

யாரைக்கேட்டு விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது

இந்த நிலையில், எதன் அடிப்படையில் விஜய்க்கு, முதலமைச்சர் அந்தஸ்த்துக்கான பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டது? யாருடைய உத்தரவின்பேரில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டது? என்று தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆளுநர் அர்லேகர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் தங்களுக்கு ஆதரவு தரக்கோரி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது. இதில், காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் அவர்களின் 5 சீட்டுகளை சேர்ந்து 112 இடங்கள் கிடைத்துள்ளது (திருச்சி கிழக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம்). ஆனால், இரண்டு கட்சிகள் இன்னும் தங்களின் முடிவுகளை தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். அப்போது பெரும்பான்மையை 112 எம்.எல்.ஏ.,க்களை வைத்து எப்படி நிரூபிப்பீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகவும், அதற்கு விஜய் விளக்கம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆளுநர் மாளிகையில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். 

தவெக பெரும்பான்மை பெறவில்லை

இதனை தொடர்ந்து, ஆட்சி அமைக்க தவெக பெரும்பான்மை பெறவில்லை என்றும் விஜய் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மை தேவை என்று ஆளுநர் அர்லேகர் அதிரடி அறிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget