கரூரில் 341 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவி - ஆட்சியர் வழங்கினார்
கரூரில் 341 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவி.
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், ஜெகதாபி கிராமத்தில்நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் 341 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1.45 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் கரூர் வட்டம், ஜெகதாபி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றுள்ளது. கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாகச் சென்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், அனைத்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம் நடத்தப்படுகிறது. நம்முடைய ஊராட்சியில் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை பல்வேறு மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது அந்த பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றைய தினம் 341 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் இந்த ஊரு 2 சிமெண்ட் சாலை அமைப்பதற்கான ரூ.10.88 இலட்சம் ரூபாய் காண நிர்வாக அனுமதியை வழங்கி உள்ளோம்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் வழியில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அரசு புறம்போக்கு உள்ள நிலங்களில் அதிக அளவில் மரங்களை நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நான் உங்களைத் தேடி உங்கள் குறைகளை தீர்த்து வைப்பதற்காக உங்களைத் தேடி வந்து இருக்கிறோம். 341 பயனாளிகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. 20000 பேருக்கு மேல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து மனு கொடுப்பார்கள் இப்பொழுது நாங்கள் எல்லாம் வந்து உங்களிடம் மனு கொடுக்கிறோம். அதை நீங்கள் தீர்த்து வைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இதுதான் எங்களுடைய கோரிக்கை அதாவது உங்கள் ஊரில் உள்ள பள்ளியில் 57 மாணவ மாணவியர்கள் பள்ளியில் இருந்து இடை நின்று உள்ளார்கள். இவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை அனைவரும் எடுக்க வேண்டும். தற்போது 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 என்று மதிப்பெண்கள் பெற்று உலகம் முழுவதும் பெயர் வாங்கி உள்ளது. கல்வி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. அதனால்தான் கரூர் மாவட்ட நிர்வாகம் ஜெகதாபி ஊராட்சி மக்களுக்கு வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால் உங்கள் பிள்ளைகள் அனைவரையும் பள்ளி படிப்பை முடிப்பதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்த ஊரில் பள்ளிக்கு செல்ல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் வாழியம்பட்டி என்ற கிராமத்தில் 27 மேற்பட்ட பள்ளி செல்ல குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அனுப்பி வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, வரும் கல்வியாண்டு முதல் ஜெகதாபி ஊராட்சியில் ஒருவர் கூட பள்ளிக்கு செல்லாமல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பள்ளி கல்லூரி படிப்பை கொடுத்தால்தான் முழுமையான வாழ்க்கையை தர முடியும். கரூர் மாவட்டத்தில் குறிப்பாக கிராமங்களில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சேகரிக்க வருவார்கள் அவர்களிடம் நீங்கள் சமுதாய அக்கறையோடு குப்பைகளைதரம் பிரித்து வழங்க வேண்டும். இதை கரூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்த போகிறோம். வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் அவ்வாறு வாழ வேண்டும் என்றால் மனிதன் கல்விவளத்தை பெருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 162 பயனாளிகளுக்கு ரூ.6480000 மதிப்பில் இ- பட்டாக்கான ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு ரூ.1,10,000 மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், 2 பயனாளிகளுக்கு நத்தம் பட்ட மாறுதல், 3 பயனளிகளுக்கு இணையவழி பட்டா மாற்றமும், 35 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகலும் 14 பயனாளிகளுக்கு உட்பிரிவு களுக்கான ஆணையும்30 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.3,60,000 உதவி தொகைக்கான ஆனைகளையும், 17 பயனளிகளுக்கு ரூ27,60,000 மதிப்பீட்டில் முதியோர் உதவி தொகைக்கான ஆணைகளையும், 18 பயனாளிகளுக்கு ரூ26,40,000 மதிப்பீட்டில் விதவை உதவி தொகைக்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ1,20,000 மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டவற்கான உதவித் தொகைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.15,00,000 மதிப்பிட்டில் வங்கி கடனுதவிகளும், சுகாதாரத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2384 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பயனளிகளுக்கு ரூ.4,25,000 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள் தொழிலாளர் நலத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் என மொத்த 341 பயனாளிகளுக்கு ரூ.1,44,92,384 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்.