80's Kaapi Club: கரூரில் 50 பைசாவிற்கு ஒரு கப் ’ஹாட்’ காபி.. சூப்பர் ஆஃபரை சுடச்சட கொடுத்த 80ஸ் காபி க்ளப்!
கரூர் - கோவை நெடுஞ்சாலையில் 80ஸ் காபி க்ளப் என்ற பெயரில் காபி கடை கடந்த ஒராண்டுகாலமாக நடத்தி வரும் நிலையில், நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
கரூர் மக்களுக்கு குட்நியூஸ்: செல்லா காசு 50 பைசாவிற்கு ரூ.15 காபி ஆஃபர்
கரூர் - கோவை நெடுஞ்சாலையில் 80ஸ் காபி க்ளப் என்ற பெயரில் காபி கடை கடந்த ஒராண்டுகாலமாக நடத்தி வரும் நிலையில், நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கரூரில் பழைய 50 பைசாவிற்கு 15 ரூபாய் மதிப்பிலான காபி ஆஃபர் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆஃபரை கேட்டு சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கடையில் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிகுட்பட்ட கே.வி.பி நகர் பகுதியினை சேர்ந்த சதீஸ் கண்ணா, ரேணுகா தேவி ஆகிய இளம் தம்பதியினர், கரூர் கோவை சாலையில் 80ஸ் காபி க்ளப் என்ற பெயரில் காபி கடையை கடந்த ஒராண்டுகாலமாக நடத்தி வருகின்றன. இந்தநிலையில், நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் நேற்று ஒரு நாள் மட்டும் சலுகையாக காபி 50 பைசா மட்டுமே என்று அறிவித்தனர்.
இதையடுத்து மக்கள் கூட்டமாக அப்பகுதியில் குவிந்தனர். செல்லாக்காசு ஆன பழைய 50 பைசாவிற்கு ஒரு காபி இலவசம் என்ற அறிவிப்பு ஒருபுறம் இருப்பினும், மக்கள் கைகளில் அந்த நாணயம் தென்பட்டு பல வருடங்களாகின்றது. மற்ற நாட்களில் ரூ 15க்கு விற்பனையாகும் காபி இன்று ஒரு நாள் மட்டும் 50 பைசா என்பதால் கள்ளாப்பெட்டியில் வெறும் 50 பைசா மட்டுமே குவிந்தது.
இதுமட்டுமில்லாமல், எவ்வளவு கொடூரமாக வெட்கையாக இருந்தாலும், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் இதை எதையும் பொருட்படுத்தாமல் டீ மற்றும் காபி லவ்வர்ஸ் தங்களது விருப்பமானவற்றை அருந்துவார்கள். அப்படி இருக்க, வெறும் 50 பைசாவிற்கு ரூ 15 மதிப்பிலான காபி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன் அதனை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த சம்பவமும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரேணுகாதேவி முதுகலை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.